இந்து & இஸ்லாம் மத இழிவுப்படுத்தியதாக 261 புகார்கள்!

- Sangeetha K Loganathan
- 09 Mar, 2025
மார்ச் 9,
இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் இழிவுப்படுத்தியதாக மலேசியா முழுவதும் காவல் நிலையங்களில் 261 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் தேசியக் காவல்துறை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார். சமூக வலைதலங்களில் இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் இழிவாகப் பேசியதற்காகவும் நடனமாடியதற்காகவும் இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மலேசியா முழுவதும் 150 தனி நபர் புகார்களும் குறிப்பிட்ட வானொலி நிறுவனத்தின் அறிவிப்பாளர்களின் கேலியானக் காணொலிக்கு எதிராக 73 புகார்களும் சமூகவலைத்தலத்தில் மதம் சார்ந்த புனித நூல்கள் தொடர்பாக இழிவாகப் பேசிய இருவர்களுக்கு எதிராக 38 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Tan Sri Razarudin தெரிவித்தார். பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை அளித்தார்.
Sebanyak 261 laporan polis dibuat di seluruh Malaysia berhubung penghinaan terhadap agama Hindu dan Islam di media sosial. Ketua Polis Negara Tan Sri Razarudin Husain menyatakan tindakan akan diambil terhadap individu dan pihak yang terlibat dalam kes ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *