கிள்ளானில் RM 33.18 மில்லியன் மதிப்புள்ள மின்னனு கழிவுகள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: நேற்று கிள்ளானில் உள்ள மேரு தொழில்துறை பூங்காவில் உள்ள ஒரு மின் கழிவுகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ RM33.18 மில்லியன் மதிப்புள்ள 1,230 டன் மின்னணு கழிவுகளை கடல் சார் பறிமுதல் செய்தனர்.

அந்த தொழிற்சாலைக்கு செல்லுபடியாகும் உரிமம் இருந்தாலும், கழிவு பதப்படுத்தும் வசதியாக மட்டுமே செயல்படுவது ஆரம்பக்க விசாரணையில் கண்டறியப்பட்டதாக கடல்சார் காவல்துறை மண்டலம் 1 தளபதி ரஸ்லி சி அரி கூறினார்.

பதப்படுத்தப்பட்ட மின்னணு கழிவுகள் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டவை என்றும், தொழிற்சாலை ஒரு கழிவு பதப்படுத்தும் வணிகம் என்ற போர்வையில் இயங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மேலதிக விசாரணைக்காக சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Polis Marin merampas 1,230 tan sisa elektronik bernilai RM33.18 juta di sebuah kilang pemprosesan sisa di Meru. Walaupun berlesen, kilang itu hanya berfungsi sebagai pusat pelupusan. Sisa tersebut diimport dari luar negara, dan siasatan lanjut dijalankan oleh Jabatan Alam Sekitar Selangor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *