MH 370 தேடுதல் வேட்டை - அமெரிக்கா, ஆஸ்திரேலியா உதவி

- Shan Siva
- 08 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 8: மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH 370-க்கான புதிய தேடுதலில் தொழில்நுட்ப உதவியை
வழங்க அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போக்குவரத்து பாதுகாப்பு
நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் காணாமல்
போன 11வது ஆண்டு நிறைவையொட்டி
வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்க தேசிய
போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (ATSB) ஆகியவை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஓஷியான்
இன்ஃபினிட்டி தலைமையிலான தேடுதலுக்கு உதவுவதாக போக்குவரத்து அமைச்சு
தெரிவித்துள்ளது.
விமான வரலாற்றில்
மிகவும் சிக்கலான மற்றும் சவாலான தேடல் நடவடிக்கைகளில் ஒன்றாகத் தொடரும் இந்த
தொடர்ச்சியான முயற்சியில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் விலைமதிப்பற்றது என்று
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
MH370- மர்மத்தைக் கண்டுபிடிப்பதற்கும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தகுதியான பதில்களை வழங்குவதற்கும் ஒவ்வொரு நம்பகமான தடயத்தையும் பின்தொடர்வது தங்களின் புனிதமான கடமையாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!
Amerika Syarikat dan Australia melantik wakil bagi membantu pencarian baharu pesawat MH370 yang diketuai Ocean Infinity. Kementerian Pengangkutan menegaskan kerjasama ini penting untuk merungkai misteri MH370 dan memberikan jawapan kepada keluarga mangsa selepas 11 tahun kehilangan pesawat itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *