முழுமையானக் கண்காணிப்பில் ரமலான் சந்தைகள்!

- Sangeetha K Loganathan
- 06 Mar, 2025
மார்ச் 6,
தலைநகரில் அமைந்துள்ள பல்வேறு ரமலான் சந்தைகளில் பாதுகாப்பும் சுகாதாரமும் முழுமையாகக் கண்காணிக்கப்படும் என கூட்டரசு வளாக அமைச்சர் Dr. Zaliha Mustafa நம்பிக்கை அளித்தார். சந்தைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்களின் தரம் தொடர்ந்து சோதிக்கப்படுவதாகவும் சுகாதாரமற்ற கடைகள் மீது உடனடி நடவடிக்கைகளைக் கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் எடுத்து வருவதாகவும் Dr. Zaliha Mustafa தெரிவித்தார்.
சந்தைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வணிக வளாகங்களில் உணவுகளை வாங்குபவர்களும் சம்மந்தப்பட்ட உணவுக் கடையின் உணவுத் தரத்தை மதிப்பீடு செய்யும் முறையையும் அமல்படுத்தியுள்ளதாகவும் சுகாதாரமற்ற உணவுகளை அடையாளம் காணவும் பொதுமக்களிடம் பெறும் புகார்களை உடனடியாக மதிப்பீடு செய்து நடவடிக்கைகளை எடுக்கவும் கோலாலம்பூர் நகராண்மைக் காழகம் தாமதிக்காமல் செயல்படும் என Dr. Zaliha Mustafa நம்பிக்கை தெரிவித்தார்.
DBKL melancarkan enam inisiatif baharu bagi memastikan Bazar Ramadan dan Aidilfitri 2025 lebih lestari, selamat dan moden. Inisiatif ini termasuk transaksi tanpa tunai, pengurangan sisa makanan, kitar semula minyak masak, larangan plastik sekali guna serta pemantauan keselamatan makanan dan kebersihan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *