BITCOIN முதலீட்டில் RM228,460 இழந்த ஆசிரியர்!

- Sangeetha K Loganathan
- 07 Mar, 2025
மார்ச் 7,
அதிக லாபம் பெரும் நோக்கத்தில் அங்கீகரிக்கப்படாத இயங்கலை முதலீடு நிறுவனத்தில் RM228,460 பணத்தை முதலீடு செய்த ஆசிரியர் மொத்த பணத்தையும் இழந்ததாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். அங்கீகரிக்கப்படாத BOTCOIN முதலீடு விளம்பரத்தைச் சமூகவலைத்தலனத்தில் கண்டதும் முதலீடு செய்ததாகப் பாதிக்கப்பட்ட 59 வயது ஆசிரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சம்மந்தப்பட்ட விளம்பரத்தின் இணைப்பில் பணத்தைச் செலுத்தியதாகவும் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 20 பணப்பரிவர்த்தனைகள் செய்ததன் மூலம் மொத்தம் RM228,460 பணத்தை அவர் இழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட முதலீடு நிறுவனம் போலியான அடையாளங்களுடன் இயங்கி வந்தததாகவும் அது அங்கீகரிக்கப்படாத BOTCOIN முதலீடு நிறுவனம் என பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்
Seorang guru rugi RM228,460 akibat skim pelaburan Bitcoin tidak wujud selepas membuat 20 transaksi ke 10 akaun bank. Mangsa sedar ditipu apabila diminta membayar lagi dan membuat laporan polis. Polis mengingatkan orang ramai agar berwaspada terhadap pelaburan mencurigakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *