நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும்! – ஒற்றுமைத் துறை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 8: நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரச குடும்ப பிரச்சினைகளைத் தொடும் தனிநபர்கள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.

இந்த முக்கியமான பிரச்சினைகளைத் தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சகம், காவல்துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC ஆகியவற்றிடம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தனது அமைச்சு eSepakat அமைப்பு மூலம் கண்காணிப்பு உட்பட சீர்திருத்த அணுகுமுறைகள், தலையீடுகள் வழி முயற்சிகளில் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, சட்டச் செயல்முறைக்கு செல்லாமல், மோதல்களைத் தணிக்கவும், சமூக மத்தியஸ்த மையம் மூலம் மாற்று தீர்வுகளை வழங்கவும் 571 சமூக மத்தியஸ்தர்கள் மூலம் மத்தியஸ்த சேவைகளையும் அமைச்சகம் வழங்குகிறது என்று அவர் கூறினார்!

Menteri Perpaduan Negara, Datuk Aaron Ago Dagang menegaskan tindakan tegas terhadap individu yang mencetuskan isu 3R (kaum, agama, dan institusi diraja). Agensi berkaitan akan mengambil tindakan, manakala kementeriannya menumpukan usaha pemantauan, intervensi, serta perkhidmatan mediasi melalui eSepakat dan pusat mediasi sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *