நஜிப்புக்கு எதிரான சுகாதார அமைச்சரின் வழக்கு- விரைவில் சமரசத் தீர்வு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 8-

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக சுகாதார அமைச்சர் ஸுல்கிப்ளி அமாட் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் விரைவில் சமரசத் தீர்வு பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் சமரசத் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் என்று நஜிப்பின் வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷாபி நேற்று தெரிவித்தார். ஆயினும், அது பற்றி விரிவாக விளக்க அவர் மறுத்து விட்டார்.

இவ்வழக்கின் அடுத்த மேலாண்மை ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடைபெறும்போது இந்த விவரங்கள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.ஸூல்கிப்ளியும் நஜிப்பும் நேற்று காலையில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
சுகாதார அமைச்சர் ஸுல்கிப்ளி தம்முடைய மகள் நூருல் இமானுக்கு அமானா இக்தியார் மலேசியா நுண்கடனளிப்பு நிறுவனத்தில் உறுப்பினராக இடம்பெறச் செய்துள்ளார் என்று நஜிப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று தனிப்பட்ட முறையில் அவர் மீது ஸூல்கிப்ளி வழக்குத் தொடர்ந்தார்.நஜிப் தமது முகநூலில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதியன்று அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் அப்பதிவு மலாய் நாளிதழ் ஒன்றிலும் வெளியானது. அக்குற்றச்சாட்டு அவதூறான ஒன்றாகும் என்று கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸூல்கிப்ளி தமது வழக்குமனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராகத் தாம் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே அப்பதவிக்கு நூருல் இமான் நியமிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் 2021ஆம் ஆண்டில் அதே பதவிக்கு அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார் என்றும் ஸூ ல்கிப்ளி கூறியிருந்தார். ஆகவே, தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நூருல் இமானுக்கு அந்நிறுவனத்தில் பதவி வாங்கித் தரவில்லை என்றும் அவர் கூறினார்.

Bekas Perdana Menteri, Najib Razak dan Menteri Kesihatan, Zulkifli Ahmad dijangka mencapai penyelesaian dalam kes fitnah yang difailkan Zulkifli terhadap Najib. Kes ini berkaitan dakwaan Najib bahawa Zulkifli menyalahgunakan kuasa untuk melantik anaknya dalam Amanah Ikhtiar Malaysia. Perkembangan lanjut dijangka diumumkan pada 4 April.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *