ஒரு போதும் நான் லஞ்சம் கேட்டதில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 7: மலேசியாகினி பத்திரிகையாளர் பி. நந்த குமார், வெளிநாட்டு தொழிலாளர் முகவர்களிடமிருந்து ஒருபோதும் தாம் லஞ்சம் கேட்டதில்லை அல்லது வெளிநாட்டு தொழிலாளர் கடத்தல் கும்பல்களை அம்பலப்படுத்தும் தனது கதைகளிலிருந்து லாபம் ஈட்டியதில்லை என்று இன்று தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் நந்தா செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார்.

வெளிநாட்டு தொழிலாளர் முகவரை அம்பலப்படுத்தும் இரண்டு கட்டுரைகளை வெளியிடாததற்காக, வெளிநாட்டு தொழிலாளர் முகவரிடமிருந்து லஞ்சம் கேட்டு பெற்றதற்காக அவர் விசாரிக்கப்பட்டார்.

 கடந்த வெள்ளிக்கிழமை அவர் சம்பந்தப்பட்ட முகவரிடமிருந்து 20 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

கட்டுரையிலிருந்து  லாபம் ஈட்ட விரும்பினால், ஆரம்பக் கதை வெளியிடப்படுவதற்கு முன்பே ஒரு பெரிய தொகையைக் கேட்டிருக்கலாமே என அவர் கூறினார்.

Wartawan MalaysiaKini, P. Nanda Kumar menafikan dakwaan menerima rasuah atau meraih keuntungan daripada pendedahan sindiket pemerdagangan pekerja asing. Selepas ditahan selama empat hari oleh SPRM, beliau dibebaskan pada 5 Mac. Nanda disiasat kerana didakwa menerima RM20,000 untuk tidak menerbitkan artikel mengenai ejen pekerja asing.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *