வீட்டுக்காவல் சட்டம் ஏற்கெனவே நடப்பில் உள்ளது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 7-

கைதிகளை வீட்டுக் காவலில் வைக்க மலேசியாவில் அனுமதியுண்டு. ஆகவே, அதற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வர அவசியம் இல்லை என்று பிரதமர்துறை அமைச்சர் (சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் சைட் நேற்று தெரிவித்தார். ஒருவரை வீட்டுக் காவலில் வைப்பதற்கு 1995ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்டத்தின் 3ஆவது பிரிவு அனுமதியளிக்கிறது என்று சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது என்று அஸாலினா கூறினார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஏதாவது ஒரு வீட்டில், கட்டடத்தில் அல்லது ஓர் இடத்தில் காவலில் வைப்பதற்கு உள்துறை அமைச்சருக்கு அச்சட்டம் அனுமதியளிக்கிறது. வேறுவிதமாக கூறுவதாக இருந்தால், சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பானவர் எனும் வகையில் எந்தவொரு வீட்டையும் வீட்டுக் காவல் வளாகமாக அறிவிக்க அவருக்கு அச்சட்டவிதி அனுமதியளிக்கிறது என்றார் அவர்.பக்காத்தான் ஹராப்பானின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்கும் விவகாரம் ஒரு பெரிய சர்ச்சையாக வெடித்திருப்பதைத் தொடர்ந்து லிம் இக்கேள்வியை முன்வைத்தார்.

கோலாலம்பூர், மார்ச் 7-

கைதிகளை வீட்டுக் காவலில் வைக்க மலேசியாவில் அனுமதியுண்டு. ஆகவே, அதற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வர அவசியம் இல்லை என்று பிரதமர்துறை அமைச்சர் (சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் சைட் நேற்று தெரிவித்தார். ஒருவரை வீட்டுக் காவலில் வைப்பதற்கு 1995ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்டத்தின் 3ஆவது பிரிவு அனுமதியளிக்கிறது என்று சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது என்று அஸாலினா கூறினார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஏதாவது ஒரு வீட்டில், கட்டடத்தில் அல்லது ஓர் இடத்தில் காவலில் வைப்பதற்கு உள்துறை அமைச்சருக்கு அச்சட்டம் அனுமதியளிக்கிறது. வேறுவிதமாக கூறுவதாக இருந்தால், சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பானவர் எனும் வகையில் எந்தவொரு வீட்டையும் வீட்டுக் காவல் வளாகமாக அறிவிக்க அவருக்கு அச்சட்டவிதி அனுமதியளிக்கிறது என்றார் அவர்.பக்காத்தான் ஹராப்பானின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

Menteri di Jabatan Perdana Menteri, Azalina Othman Said, menegaskan bahawa undang-undang Malaysia sudah membenarkan tahanan dikenakan tahanan rumah di bawah Seksyen 3 Akta Penjara 1995. Oleh itu, tiada keperluan untuk memperkenalkan undang-undang baharu mengenai isu ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *