ஜொகூரில் 75 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

மார்ச் 6,

ஜொகூரில் Pasar Borong Pandan வணிகச் சந்தையில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த 75 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். Pasar Borong Pandan வணிகச் சந்தையில் உள்ள 20 வளாகங்களிலும் Bandar Baru Permas Jaya வணிகச் சந்தையில் உள்ள 9 வளாகங்களிலும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டிருக்கும் 75 வெளிநாட்டினர்களும் 18 முதல் 55 வயதினர் என அவர் தெரிவித்தார். சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்து சட்டவிரோதமாக அவர்கள் வேலை செய்து வந்ததாகவும் சிலரிடம் எந்தவோர் ஆவணங்களும் இல்லாததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார்.

Jabatan Imigresen menahan 75 warga asing berusia 18 hingga 55 tahun yang bekerja secara haram dalam serbuan di Pasar Borong Pandan dan Bandar Baru Permas Jaya, Johor. Sebahagian mereka masuk ke Malaysia dengan visa pelancong dan tidak memiliki dokumen sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *