அமைச்சர் ஜலிஹா முஸ்தபா & பாஃமி பாஃட்சிலுக்கு விருது!

- Muthu Kumar
- 07 Mar, 2025
கோலாலம்பூர்:
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் உட்பட 32 பேருக்கு கூட்டரசுப் பிரதேச தினத்துடன் இணைந்து கூட்டரசு பிரதேச விருதுகள், மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விழாவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா பெர்மைசூரி சாரித் சோபியா ஆகியோர் கலந்து கொண்டனர்.இநிகழ்வில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹாவுக்கு டத்தோஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் டத்தோ பட்டத்தைப் பெற்றார்.
அவரோடு சேர்த்து 9 பேருக்கு டத்தோ பட்டம் வழங்கப்பட்டது.சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் பிற அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Menteri Wilayah Persekutuan, Dr. Zaliha Mustafa, dan Menteri Komunikasi, Fahmi Fadzil, antara 32 penerima anugerah dan pingat sempena Hari Wilayah Persekutuan. Istiadat di Istana Negara disempurnakan oleh Yang di-Pertuan Agong, turut dihadiri Perdana Menteri Anwar Ibrahim dan menteri kabinet.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *