விபத்தில் 18 வயதுடைய இருவர் பலி! மூவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 08 Mar, 2025
மார்ச் 8,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 18 வயதுடைய 2 இளைஞர்கள் பலியானதுடன் உடன் பயணித்த மூன்று நபர்களும் படுகாயம் அடைந்ததனர். அலோர் ஸ்டாரில் உள்ள Jalan Tanjung Bendahara சாலையில் இரவு 10.39 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாக KOTA SETAR மாவட்டக் காவல் ஆணையர் Siti Nor Salawati Saad தெரிவித்தார்.
இரவு தொழுகையை முடித்து நண்பர்கள் ஐவர் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதாகவும் வாகனத்தில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் மூவர் Sultanah Bahiyah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் KOTA SETAR மாவட்டக் காவல் ஆணையர் Siti Nor Salawati Saad தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் தடுப்புச் சுவரை மோதி, மின் கம்பத்தை மோதி, தென்னை மரத்தை மோதி, அதன்பின்னர் பேருந்து நிறுத்தத்தின் சுவரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Dua remaja 18 tahun maut, tiga lagi cedera dalam kemalangan di Jalan Tanjung Bendahara, Alor Setar. Kenderaan hilang kawalan dan melanggar beberapa objek sebelum berhenti di dinding hentian bas. Mangsa dikejarkan ke Hospital Sultanah Bahiyah untuk rawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *