மாநகர் மன்ற அதிகாரிகளைத் தாக்கிய சட்டவிரோத வியாபாரிகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 7-

நேற்றுமுன்தினம் ரமலான் மற்றும் நோன்புப் பெருநாள் சந்தைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளை சட்டவிரோத வர்த்தகர்கள் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். அது குறித்து போலீசில் இரண்டு புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் ஜாலான் பெந்தேங் ஆகிய இடங்களில் நடைபெற்ற அச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் மாநகர் மன்றம் குறிப்பிட்டது.

இச்சம்பவங்களை மாநகர் மன்றம் கடுமையாகக் கருதுகிறது. பொதுமக்களின் நலன் கருதி சேவையாற்றிவரும் எங்களின்
அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற மூர்க்கத்தனத்தை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்.

அனைத்துத் தரப்பினரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். கோலாலம்பூரைக் கட்டுக்கோப்புடனும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு அதிகாரிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் மாநகர் மன்றம் வலியுறுத்தியது.

Pegawai Dewan Bandaraya Kuala Lumpur (DBKL) diserang oleh peniaga haram semasa memantau bazar Ramadan dan Aidilfitri, menyebabkan dua laporan polis dibuat. DBKL mengecam kejadian itu dan menegaskan kepentingan menghormati undang-undang serta bekerjasama untuk mengekalkan kebersihan dan ketertiban bandar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *