அலோர் ஸ்டார் விபத்து - 2 இளைஞர்கள் பலி!

- Shan Siva
- 07 Mar, 2025
அலோர் ஸ்டார், மார்ச் 7- வேகக்
கட்டுப்பட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு பதின்ம வயது இளைஞர்கள் பலியாகினர், மேலும் மூவர் காயமடைந்தனர்.
கெடா, அலோர் ஸ்டார் ஜாலான் தஞ்சோங் பெண்டஹாராவில் உள்ள கான்வென்ட் தேசிய இடைநிலைப் பள்ளிக்கு அருகே நேற்றிரவு இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்தில்18 வயது நிரம்பிய இளைஞர்கள் ஐவர் பயணம் செய்த பெரோடுவா மைவி கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதாக
நம்பப்படுகிறது.
காரிலிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. பலத்த காயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Dua remaja maut dan tiga lagi cedera selepas sebuah Perodua Myvi hilang kawalan lalu merempuh penghadang jalan di Jalan Tanjong Bendahara, Alor Setar. Kemalangan berlaku berhampiran Sekolah Menengah Kebangsaan Convent pada malam 6 Mac. Mangsa yang cedera dirawat di Hospital Sultanah Bahiyah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *