நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் மதப் பிரச்னைகள் வேண்டாம்! - ஜாஹிட் ஹமிடி வேண்டுகோள்

- Shan Siva
- 08 Mar, 2025
அலோர் காஜா, மார்ச் 8: மலேசியாவில் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதை
உறுதி செய்வதற்காக மதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது
என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மடானி அரசாங்கம்
கூட்டாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நிலைநிறுத்துகிறது என்பதில்
நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும் அரசாங்கத்திற்குள் உள்ள கட்சிகளும்
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதரிக்கின்றன என்று அவர் நேற்று இரவு கம்போங் ரந்தாவ் பஞ்சாங்கில்,
மஸ்ஜித் தனாவில் நடந்த தெற்கு மண்டல அளவிலான
சாந்துனான் காசிஹ் ரமலான் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம்
கூறினார்.
மலாக்கா
முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ மற்றும் பாரிசான் நேஷனல் பொதுச்
செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்த் காதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல இன சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதப் பிரச்சினைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஜாஹிட் நினைவூட்டினார்!
Timbalan Perdana Menteri, Ahmad Zahid Hamidi menegaskan komitmen kerajaan dalam memastikan keharmonian Malaysia terpelihara. Beliau menekankan kepentingan menegakkan prinsip Perlembagaan Persekutuan dan mengingatkan agar isu agama tidak disalahgunakan untuk mencetuskan ketegangan dalam masyarakat pelbagai kaum di negara ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *