மியான்மார் ஆடவர் வெட்டிக் கொலை! நால்வரைத் தேடும் காவல்துறை!

top-news

மார்ச் 7,

பினாங்கில் உள்ள உணவகத்தில் மியான்மார் ஆடவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதாக நால்வர் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர்களைத் தேடி வருவதாகவும் வடக்கு Seberang Perai காவல் ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார். இன்று அதிகாலை 3.20 மணியளவில் பினாங்கின் Taman Sepadu Jaya பகுதியில் மியன்மார் ஆடவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் கொலையில் நால்வர் சம்மந்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட நால்வரின் அடையாளத்தையும் காவல்துறையின் சேகரித்து வருவதாகவும் வடக்கு Seberang Perai காவல் ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார். உயிரிழந்த மியான்மார் நாட்டு ஆடவர் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang pekerja restoran warga Myanmar maut selepas ditetak empat lelaki bersenjatakan parang di Tasek Gelugor. Mangsa cuba melarikan diri tetapi dikejar dan diserang hingga terbaring. Polis giat mengesan suspek yang melarikan diri dengan kenderaan berwarna gelap.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *