அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டேன்! PKR மூத்த தலைவர் முடிவு!

top-news

மார்ச் 9,

PASIR GUDANG நாடாளுமன்ற உறுப்பினரும் PKR கட்சியின் தோற்றுநர்களில் ஒருவருமான Hassan Abdul Karim அடுத்து வரும் 16 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அறிவித்தார். PASIR GUDANG மாவட்ட பி.கே.ஆர் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அவர், மே மாதம் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்றும் அடுத்த பொதுத்தேர்தலில் PASIR GUDANG நாடாளுமன்றத்தைத் தக்க வைக்கவும் போட்டியிடமாட்டேன் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு அன்வார் பி.கே.ஆர் கட்சியைத் தோற்றுவிக்கும் போது நான் அவருடன் இருந்தேன். பிகேஆர் கட்சி அது தோற்றுவிக்கப்பட்டதற்கான நோக்கத்தை அடைந்திருக்கும் நிலையில் சீர்த்திருத்தங்களில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. பி.கே.ஆர் கட்சி அதன் முழுமையான நிலையைப் பெற இளம் தலைவர்கள் உருவாக வேண்டும். இப்போது பி.கே.ஆர் கட்சியில் இளைஞர்கள் வெளிப்படையான அரசியலை முன்னெடுக்கின்றனர். அவர்களைத் தலைமை பொறுப்பில் அமர வைக்க வேண்டும் என்பதை Hassan Abdul Karim வலியுறுத்தினார்.

Ahli Parlimen Pasir Gudang, Hassan Abdul Karim mengumumkan tidak akan bertanding dalam PRU16 serta pemilihan PKR akan datang. Beliau menegaskan keperluan kepimpinan baharu dalam PKR dan menyeru agar generasi muda diberi peluang untuk menerajui parti ke arah masa depan yang lebih baik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *