ஆஸ்ட்ரோவின் உயர் நிர்வாகத்தினரை அழைத்து உள்ளதாக MCMC அறிக்கை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 6 –

இந்துக்களின் புனித சடங்கான காவடி ஆட்டத்தைக் கேலியாகச் சித்தரித்து காணொளி வெளியிட்ட  ஏரா எஃப்.எம்.மைச் சேர்ந்த சிலரின் செயல் தொடர்பான விசாரணை அறிக்கை  இன்று துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

சட்டத் திருத்தத்திற்குப் பிந்தைய விதிகளின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச்  சட்டத்தின்  233வது பிரிவின் கீழ்  இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக  ஆஸ்ட்ரோவின் உயர் நிர்வாகத்தினரை  தாங்கள் அழைத்துள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC  நேற்றிரவு  வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக,  ஏரா எஃப்.எம். உரிமத்தை  தற்காலிகமாக முடக்குவதற்கான நோக்க அறிவிப்பும் லைசென்ஸ் உரிமையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்தக ஆணையம் கூறியது.எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பும் கருத்துத் தெரிவிக்க லைசென்ஸ்  உரிமையாளருக்கு 30 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Laporan siasatan terhadap tindakan kru Era FM yang mempersendakan upacara kavadi diserahkan kepada Pejabat Timbalan Pendakwa Raya hari ini. MCMC turut memanggil pengurusan Astro serta mengeluarkan notis penggantungan sementara lesen, memberi tempoh 30 hari untuk respons sebelum keputusan dibuat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *