இதர நாடுகளுக்கு ஈடாக பாலர்பள்ளி திட்டம்!

- Shan Siva
- 07 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 7 – பாலர் பள்ளி
பாடத்திட்டம் தரமான, பொருத்தமான மற்றும் இதர
நாடுகளின் பாடத்திட்டங்களுக்கு ஈடாக இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக
கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.
குழந்தை
நிபுணர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மழலையர் பள்ளி
நடத்துனர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் ஈடுபாட்டுடன், 2026-ஆம் ஆண்டு பாலர் பள்ளி பாடத்திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் சாத்தியக்கூற்றை உறுதி செய்வதற்காக, இப்பாடத்திட்டம் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவன பாலர் பள்ளிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
Kerajaan komited memastikan kurikulum prasekolah berkualiti dan setanding dengan negara lain. Dibangunkan dengan penglibatan pakar, guru, dan ibu bapa, kurikulum 2026 sedang diuji di sekolah kerajaan dan swasta bagi menjamin keberkesanannya, menurut Timbalan Menteri Pendidikan, Wong Kah Woh.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *