7 டன் மானிய விலை சமையல் பொருள்கள் கடத்திய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 06 Mar, 2025
மார்ச் 6,
அரசு மானிய விலையிலானச் சமையல் பொருள்களைக் கடத்தியதாக நம்பப்படும் 32 வயது உள்ளூர் ஆடவர் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். தாவாவ் கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய படகை ரோந்து பணியில் இருந்த கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதில் உள்ளூர் அரிசி, சர்க்கரை, எரிவாயு கலண்கள், கோதுமை மாவு பாக்கெட்டுகள், சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் இருந்த பொருள்களுக்கான ஆவணங்களைக் கொண்டிருக்காததால் சம்மந்தப்பட்ட படகு ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருவதாகவும் இது தொடர்பான விசாரணையில் அரசு மானிய விலையிலானப் பொருள்களைக் கடத்த முயன்றதாகவும் கைது செய்யப்பட்ட 32 வயது உள்ளூர் ஆடவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Seorang lelaki tempatan berusia 32 tahun ditahan oleh pihak berkuasa maritim di perairan Tawau kerana menyeludup tujuh tan barang kawalan bersubsidi tanpa permit. Barang rampasan termasuk beras, gula, tong gas, tepung gandum dan minyak masak. Kes masih dalam siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *