சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைக் கடத்தும் கும்பல் கைது!

- Sangeetha K Loganathan
- 06 Mar, 2025
மார்ச் 6,
தேசிய குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் வெளிநாட்டினர்களை சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரும் தொழிலாளர் இறக்குமதி நிறுவனத்தைச் சேர்ந்த 6 வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 412 அனைத்துலகப் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், அம்பாங், ஷா அலாம் ஆகிய பகுதிகளில் இச்சோதனையை மேற்கொண்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். அவர்களிடமிருந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்கு இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் போலி முத்திரையும் 12,000 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்ட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் வெளிநாட்டிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாக வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Imigresen menahan enam lelaki warga asing dan merampas 412 pasport dalam serbuan di Kuala Lumpur, Ampang dan Shah Alam. Mereka dipercayai terlibat dalam sindiket penyeludupan pekerja asing secara haram. Turut dirampas, cop palsu syarikat serta wang tunai RM12,000.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *