RM500,000 லஞ்சம் பெற்றதாகச் சிறப்பு அதிகாரிகள் இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 07 Mar, 2025
மார்ச் 7,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்பு அதிகாரிகள் இருவர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்பு அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. 30 வயதுடைய இருவரும் புதன்கிழைமை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின்னர் RM1.5 மில்லியன் மதிப்புள்ள திட்டத்திற்காக RM500,000 லஞ்சம் பெற்றதற்காகக் இரவு 9.30 மணிக்குக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்கள் நலத்திட்டத்திற்கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை ஞாயிறு வரையில் இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரின் அடையாளமும் வெளியிடப்படும் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
SPRM menahan reman bekas pegawai khas ahli Parlimen dan seorang individu lain kerana disyaki menerima rasuah RM500,000 untuk meluluskan dana Projek Mesra Rakyat. Kes melibatkan pembekalan Interactive Smart Board ke sekolah di Kuala Lumpur. Reman empat hari dikenakan ke atas suspek.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *