சாலையில் முழுவதுமாக மறைத்த TRELER லாரி!

- Sangeetha K Loganathan
- 06 Mar, 2025
மார்ச் 6,
கெந்திங்மலையில் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த TRELER லாரி சாலையின் குறுக்கே நின்றதால் சுமார் 6 மணிநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது. காலை 9.15 மணிக்கு அதிக எடையிலானச் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச் சென்றதால் TRELER லாரி சாலையின் குறுக்கே செயலிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என பெந்தோங் மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
காலை 9.15 முதல் பிற்பகல் 2.35 மணிவரையில் சம்மந்தப்பட்ட சாலையில் கடுமையானப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மீட்பு ஆணையத்தின் இழுவை லாரி மூலமாகச் சம்மந்தப்பட்ட TRELER லாரி அப்புறப்படுத்தப்பட்டதாகவும் மாலை 3.15 மணிக்குப் போக்குவரத்து சீரானதாகவும் பெந்தோங் மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
Sebuah treler membawa muatan simen hilang kawalan dan melintang di jalan di Genting Highlands menyebabkan kesesakan selama enam jam. Insiden berlaku pada 9.15 pagi dan treler hanya dialihkan pada 3.15 petang menggunakan lori penunda.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *