ஐக்கிய முன்னணிக்குப் பலம் சேர்க்க வெளியே உள்ள தலைவர்களுடன் முகைதீன் சந்திப்பு!

- Shan Siva
- 19 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 19: தேசிய நலன்களை மேம்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட "ஐக்கிய முன்னணி" குறித்து அரசாங்கக் கூட்டணிக்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசின் நேற்று மாலை சந்தித்தார்.
பெஜுவாங் தலைவர்
முக்ரிஸ் மகாதிர், மூடாவின்
தற்காலிகத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ், புத்ரா தலைவர் இப்ராஹிம் அலி, உரிமை தலைவர் பி ராமசாமி, PSM துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் மற்றும் மலேசிய
முன்னேற்றக் கட்சியின் தலைவர் பி வேத மூர்த்தி ஆகியோர் கூட்டத்தில் கலந்து
கொண்டனர்.
அத்தகைய
முன்னணியை உருவாக்குவது "நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ"
கட்டுப்பாடு மற்றும் சமநிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று முகைதீன்
கூறினார்.
இந்த முன்மொழிவு
குறித்து கலந்து கொண்டவர்களிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த கருத்துகள் மிகவும்
நேர்மறையானவை என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த PN
உச்ச மன்றக் கூட்டத்தில் தாம் அவர்களின் கருத்துகள்
குறித்து விவாதிக்கவிருப்பதாக அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை,
அரசாங்கக் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளுடன்
உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல பெர்சாத்து அதன் தலைவர் முகைதீனுக்கு
அங்கீகாரம் அளித்தது.
இந்த முயற்சி
மக்களின் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை உருவாக்குவதை
நோக்கமாகக் கொண்ட விவாதங்களை உள்ளடக்கும் என்று பெர்சத்து பொதுச் செயலாளர் அஸ்மின்
அலி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *