மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 1,071 பிலிப்பின்ஸ் நாட்டினர் தாயகம் திரும்பினர்!

top-news

மார்ச் 7,

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 1,071 பேர் அவர்களுக்கானத் தண்டனைக் காலம் முடிவுற்ற நிலையில் அவர்களை மீண்டும் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் சபா குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. முதல் சுற்றில் 180 பேரும், இரண்டாம் சுற்றில் 891 பேரும் என மொத்தம் 1,071 பேர் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சபாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த மக்கள் சோதனையில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் 2,273 பேர் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சபா குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மலேசியாவில் தங்கியிருந்த காலத்தில் எந்தவொரு குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என விசாரணை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Jabatan Imigresen Sabah menghantar pulang 1,071 PATI Filipina dalam dua sesi termasuk bayi berusia tiga hari hingga warga emas 82 tahun. Mereka dipindahkan ke Bongao dan Zamboanga selepas menjalani hukuman. Setakat ini 2,273 warga asing telah dihantar pulang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *