RM100,000 ரோஸ்மாவுக்குச் செலுத்த வேண்டும்! டிக் டாக் பயனருக்கு நீதிபதி உத்தரவு!

- Shan Siva
- 08 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 8: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சூனியம் மற்றும் போமோ விவகாரங்களில் ஈடுபட்டதாகக் கூறி அவதூறு பரப்பியதற்காக, ரோஸ்மாவுக்கு RM100,000 செலுத்துமாறு ஒரு டிக்டாக் பயனருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோஸ்மாவின்
வழக்குக்கு பதிலளிக்க பிரதிவாதியான 35 வயதான கு ஹில்மி கு தின், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் ஆஜராகும்
குறிப்பாணையை தாக்கல் செய்யத் தவறியதை அடுத்து, நீதிபதி அஹ்மத் ஷாஹ்ரிர்
சாலே இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஜூம் வழியாக
ஆன்லைனில் நடைபெற்ற நடவடிக்கைகளின் போது, ரோஸ்மா மன்சோர் கு ஹில்மிக்கு எதிரான தனது கூற்றை வெற்றிகரமாக
நிரூபித்ததாக ஷாஹ்ரிர் தெரிவித்தார்.
ரோஸ்மா, கடந்த 2023 ஆம் ஆண்டு, செப்டம்பர் 19 ஆம் தேதி சம்பந்தப்பட்ட டிக்டாக்
கணக்கு வைத்திருப்பவரின் மீது, தமது நற்பெயற்றுக்குக்
களங்கம் ஏற்பட்டதற்காக RM1 மில்லியன் இழப்பீடு கோரி வழக்குத்
தொடர்ந்தார்.
ஆறு மாதங்களுக்கு
முன்பு, பிரதிவாதி தனது டிக்டோக் கணக்கில் தன்னைப் பற்றிய தவறான
மற்றும் அவதூறான அறிக்கைகளைக் கொண்ட ஒரு வீடியோவைப் பதிவேற்றியதாக ரோஸ்மா
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *