இஸ்மாயில் சப்ரி தொடர்பான விவகார விசாரணைக்கு 10 சாட்சிகள் அழைக்கப்படுவர்

- Muthu Kumar
- 03 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 3
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்பிலான லஞ்ச ஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைக்கு உதவுவதற்காக, குறைந்தது 10 சாட்சிகளை மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) அழைக்க விருக்கிறது.
நாட்டின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி இருந்த காலகட்டத்தில், ஊக்குவிப்பு மற்றும் விளம்பர நோக்கங்களுக்கான நிதியின் செலவு மற்றும் கொள்முதல் மீது விசாரணை கவனம் செலுத்தும் என்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்ஏசிசி தெரிவித்தது.
2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தைத் தவிர்த்து, 2001ஆம் ஆண்டு கள்ளப் பணப் பரிமாற்றம். பயங்கரவாதத்திற்கு நிதி உதவியளித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பணம் பெற்றல் தடைச் சட்டத்தின் கீழும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அது கூறியது.
இவ்விசாரசணையின் ஓர் அங்கமாக, 2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் செக்ஷன் 360இன் கீழ், தமது சொத்து விவரங்களை அறிவிக்குமாறு. கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி இஸ்மாயில் சப்ரிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக அவ்வறிக்கை தெரிவித்தது.
அதன் பின்னர், அவரின் சொத்து விவரங்கள் இம்மாதம் 10ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின்பேரில் இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக, கடந்த சனிக்கிழமை எம்ஏசிசி கூறியிருந்தது. அவர்களை தடுத்து வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த மூன்று நாள் தடுப்புக் காவல் உத்தரவு முடிவடைந்த பின்னர், டத்தோ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட மூவர் கடந்த வாரத்தில் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையே விடுவிக்கப்பட்டிருந்தார்.
அந்த நால்வரில் ஒருவரின் வீட்டிலிருந்து எம்ஏசிசி அதிகாரிகள் 10 கோடி வெள்ளிக்கும் மேலான ரொக்கத்தைக் கைப்பற்றியிருந்தனர். அது அரசியல் நிதியுடன் தொடர்புடைய பணம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் எம்ஏசிசி கூறியிருந்தது.
Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) memanggil sekurang-kurangnya 10 saksi bagi membantu siasatan terhadap bekas Perdana Menteri, Datuk Seri Ismail Sabri Yaakob, berkaitan rasuah dan pengubahan wang haram. Siasatan tertumpu pada perbelanjaan dana promosi semasa pentadbirannya, dengan empat bekas pegawai kanan turut disoal siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *