ரஃபிஸி தோல்வி! கண்கலங்கி குரல் உடைந்து பேசிய சைஃபுடின்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர்பாரு, மே 24: நேற்று கட்சித் தலைமைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் ரஃபிஸி ரம்லி நூருல் இஸா அன்வாரிடம் தோல்வியடைந்த தருணங்களை நினைவு கூர்ந்தபோது, ​ பிகேஆர் முன்னாள் பொதுச் செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கண்கலங்கினார்.

கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய சைஃபுதீன், மற்றவர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ​​ரஃபிஸியுடன் மண்டபத்திலிருந்து வெளியே சென்றதாக அவர் கூறினார்.

 நான் ரஃபிஸியை அவரது காரில் அழைத்துச் சென்றேன். நாங்கள் கட்டிப்பிடித்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டோம், அந்த நேரத்தில், எங்கள் கட்சியிலிருந்து அவரை இழக்க நேரிடும் என்று பயந்தேன் என்பதை ஒப்புக்கொண்டேன், என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு குரல் உடைந்து கூறினார்.

கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளான இன்று ரஃபிஸி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் இக்பால், அவர் கோலாலம்பூருக்குத் திரும்பியதை உறுதிப்படுத்தினார்.

கட்சித் தேர்தல்களின் போது உடைந்திருக்கக்கூடிய உறவுகளைச் சரிசெய்யும் பெரும் கடமை கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு உள்ளது என்று சைஃபுதீன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *