போதை அடிமைகள் 115 பேர் கைது! லங்காவியில் பிடிபட்டனர்

- Shan Siva
- 24 Feb, 2025
லங்காவி, பிப் 24: தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் (AADK) மற்றும் கடலோர காவல்துறை இணைந்து நேற்று நடத்திய ஓப்ஸ் பெர்டானா நடவடிக்கையின்போது 115 போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 61 வயதுடைய மூன்று முதியவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நீடித்த இந்த
நடவடிக்கையில், கம்போங் புக்கிட்
மாலுட்டில் 19 முதல் 40 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்கள் போதைப்பொருள்
பயன்படுத்தியபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
வரும் மே மாதம் நடைபெறும் லங்காவி சர்வதேச கடல்சார்
மற்றும் விண்வெளி கண்காட்சி 2025 (LIMA'25) க்கு முன்னதாக ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதே ஒப்ஸ்
பெர்டானாவின் முக்கிய நோக்கம் என்று AADK துணை இயக்குநர் கைருல் அன்வர் பாச்சோக் கூறினார்.
இந்த
நடவடிக்கையில் 30 AADK அதிகாரிகள்
ஈடுபட்டனர், அவர்களுக்கு
லங்காவி கடல் காவல் மண்டலம் 1 இன் பணியாளர்கள்
ஆதரவு அளித்தனர். கம்போங் புக்கிட் மாலுட் மற்றும் தாமான் நீலாம் ஆகிய இரண்டு
முக்கிய இடங்களில் சோதனைகள் மற்றும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் இன்று AADK லங்காவி அலுவலகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில்
தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *