கேஎல்ஐஏ வழியாக தப்பிக்க முயன்ற 12 வெளிநாட்டவர் கைது!

- Muthu Kumar
- 01 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 1-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ) முனையம் 2 வழியாக,சட்டவிரோதமாக மலேசியாவை விட்டு வெளியேற முயன்றதற்காக வியட்னாம் மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த 12 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்ட பின்னர், ஐந்து பொதுச் சேவை ஊழியர்கள் மீது தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த 12 வெளிநாட்டினரும் கடந்த ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 12ஆம் தேதிகளில் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்றிருக்கின்றனர். நாட்டை விட்டு வெளியேற அந்த வெளிநாட்டவர்கள் முயன்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஐந்து அரசு அதிகாரிகளை உடனடியாக வேறு இடத்தில் பணியில் அமர்த்தியதன் மூலம், தான் உடனடி நடவடிக்கையை எடுத்திருப்பதாக.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.
.“இந்த அதிகாரிகள் அனைவரும். 1990ஆம் ஆண்டு பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் கட்டொழுங்கு விதிமுறைகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்தது.பொதுச் சேவையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அல்லது விதிமுறைகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தது. விமானத்தினுள் நுழைவதற்கு முன்னர் மூன்று வியட்னாமியர்களும் ஒன்பது கம்போடியர்களும் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் இருந்ததை தனது அதிகாரிகள் கண்டு பிடித்ததாக அந்நிறுவனம் கூறியது.
அவர்கள் அனைவரும். போலியான மற்றும் சட்டவிரோதமாகப் பெறப்பட்டவை என்று நம்பப்படும் நாட்டிற்கும் நுழையும் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் ஆவணங்களைக் கொண்டிருந்தது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்று அது தெரிவித்தது.
அந்த 12 வெளிநாட்டினரும் நாட்டில் கூடுதல் நாட்களுக்குத் தங்கி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக கூறிய அது. அந்த மூன்று வியட்னாமியர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வேளையில், ஒன்பது கம்போடிய பிரஜைகள், மேல் விசாரணைக்காக இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.
Seramai 12 warga asing dari Vietnam dan Kemboja ditahan di KLIA2 kerana cuba keluar dari Malaysia secara haram. Lima pegawai perkhidmatan awam disiasat berhubung kes ini. Tiga warga Vietnam telah dihantar pulang, manakala sembilan warga Kemboja masih ditahan untuk siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *