தீப்பிடிக்கும் சாத்தியமுள்ள 14 HotSpot இடங்கள்! தயார் நிலையில் மீட்புத் துறை!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, பிப் 19: வடகிழக்கு பருவமழை மாற்றத்திற்கு மாநிலம் தயாராகி வருவதால், தீப் பிடிக்கும் சாத்தியமுள்ள 14 திறந்தவெளி ஹாட் ஸ்பாட் இடங்களை ஜொகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் பருவமழை மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வறண்ட நிலைமைகள் ஏற்கனவே தீச்சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனை அடுத்து தீ அபாயங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள், மனிதவளம் மற்றும் உபகரணங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சிதி ரோஹானி நாதிர் தெரிவித்தார்.  

1,400 பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர், தீ விபத்துகளை நிர்வகிக்க சிறிய பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன என்று அவர் தலைமையகத்தில் நடைபெற்ற துறையின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பெரிய அளவிலான தீ விபத்துகளைச் சமாளிக்க, புத்ராஜெயாவில் உள்ள ஹெலிகாப்டர் பிரிவின் கூடுதல் ஆதரவுடன் ஒரு சிறப்பு 'ரெட் அலர்ட் குழு' அணிதிரட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடையாளம் காணப்பட்ட ஹாட்ஸ்பாட்களில் குளுவாங்கில் உள்ள கம்போங் இப்ராஹிம் மஜித், கோத்தா திங்கியில் உள்ள லடாங் இப்ஸி மற்றும் லடாங் செபானா-புங்கை, மற்றும் பொந்தியானில் உள்ள ஜாலான் பாரிட் மகாசர் மற்றும் சாங்லாங் ஆகியவை அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *