டிக் டாக்கில் தடை செய்யப்பட்ட 18 உள்ளூர் ஊடகங்கள்! டிக்டாக்குடன் MCMC தொடர்புகொண்டுள்ளதாக அமைச்சு தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 24: சமீபத்தில் தடை செய்யப்பட்ட 18 உள்ளூர் ஊடக நிறுவனங்கள் குறித்து விளக்கம் பெற மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, TikTok உடன் தொடர்பு கொண்டுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

TikTok இலிருந்து பெறப்பட்ட ஆரம்பக்கட்ட தகவலின்படி, பத்தாங் காலியில் உள்ள ஒரு மசூதியில் ஓர் இளம் பெண் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த புகார்கள் எழுந்ததால் கேள்விக்குரிய கணக்குகள் முடக்கப்பட்டதாக அவர் கூறினார்.

TikTok இன் செயற்கை நுண்ணறிவு (AI) தானே உள்ளடக்கங்களை மதிப்பிடுவதால் இந்த சிக்கல் எழுகிறது என்று அவர் கூறினார்.

AI சில நேரங்களில் மிகைப்படுத்தி, ஊடக நிறுவன அறிக்கைகளை, தனிமனித பயனர்களால்ப் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்திலிருந்து வேறுபட்டது என்பதை புரிந்து கொள்ளாமல் போகலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க, ஊடகங்களுக்குச் சொந்தமான TikTok கணக்குகளின் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்த ஒரு விவாதம் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று தாம் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *