2026 மலேசியாவுக்கு வருகை புரியும் காணொளிக்கு வெ.19 லட்சம் செலவு!

- Muthu Kumar
- 21 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 21-
2026 மலேசியாவுக்கு வருகை புரிவதற்கான விளம்பர காணொளியை தயாரிப்பதற்கு 19 லட்சம் வெள்ளி செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அக்காணொளி 40 நிமிடம் ஓடக்கூடியது என்றும், சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான ஓர் உயர் சுற்றுலாப் பயண இடமாக மலேசியாவைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அக்காணொளி தயாரிக்கப்பட்டிருப்பது மற்றும் அதற்கான செலவு குறித்து நேற்றைய மக்களவைக் கூட்டத்தில், பெரிக்காத்தான் நேஷனலின் மஸ்ஜிட் தானா எம்பி எர்மியாத்தில் சம்சூடின் கேட்டிருந்த ஒரு கேள்விக்கு தியோங் இவ்வாறு பதிலளித்தார்.
அவ்விளம்பர காணொளி தயாரிப்பு குத்தகை, முறையான டெண்டர் மூலம் வழங்கப்பட்டது. நிதி அமைச்சிடமிருந்து அனைத்து அங்கீகாரமும் காணொளி இலவசமாக தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சிடம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.அந்த 40 நிமிடங்கள் கொண்ட காணொளி, ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் குறிப்பிட்ட சுற்றுலா இடங்களை உள்ளடக்கி குறுகிய நிமிடங்களில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த ந்த முழு காணொளியும் க 40 நிமிடங்கள் கொண்டது.நாட்டின் அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களை மையமாகக் கொண்ட ஐந்து வெவ்வேறு காணொளிகளும் எங்களிடம் உள்ளன.சில வேளைகளில், தாங்கள் சுற்றுலா செல்ல விரும்பத் திட்டமிட்டிருக்கும் மாநிலங்கள் குறித்த காணொளிகளை மட்டுமே பார்க்க சுற்றுப் பயணிகள் விரும்புகின்றனர்" என்று தியோங் கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனித்துவமிக்க சுற்றுலாத் தலங்களை, முழுமையான விளம்பர காணொளி முன்னிலைப்படுத்தும் என்று, கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தியோங் வாக்குறுதி அளித்திருந்தார்.தயாரித்து முடிக்கப்பட்டுள்ள காணொளியை “செம்மைப்படுத்துமாறு" அமைச்சின் தலைமைச் செயலாளர் ரொஸ்லான் அப்துல் ரஹ்மான் உட்பட அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட முன்னோடி காணொளி, மலேசியாவின் முஸ்லிம் பெரும்பான்மையை போதுமான அளவில் பிரதிநிதித்திருக்கவில்லை என்று கூறி, பெர்சத்து மற்றும் பாஸ் கட்சி இளைஞர் பிரிவினர் குறைகூறியிருந்தனர். அக்காணொளி,தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் போன்ற முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களின் மீதே அதிக அளவில் கவனம் செலுத்தி இருந்ததாகவும் அவர்கள் வாதிட்டிருந்தனர்.
நாற்பத்தோரு நிமிடங்கள் கொண்ட முன்னோடி காணொளியில், கோலாலம்பூரில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட், லங்காவியில் உள்ள ஸ்காய்பிரிட்ஜ், சிலாங்கூரில் உள்ள பத்து மலை, மலாக்காவில் உள்ள கிரைஸ்ட் சர்ச் (இயேசு தேவாலயம்) மற்றும் பல கலாச்சார அம்சங்கள் உட்பட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இடம் பெற்றுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *