கொலை முயற்சி குற்றச்சாட்டில் 24 வயது இளைஞருக்கு RM 10000 அபராதம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். பிப் 27: கடந்த மாதம் ஜாலான் கிளாங் லாமாவில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே நிகழ்ந்த கொலை முயற்சி குற்றச்சாட்டில் 24 வயது இளைஞர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஜனவரி 29 ஆம் தேதி காலை 6 மணியளவில் டாப் பிளஸ் கிளப்பின் முன் அவரது செயல்கள் பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை முழுமையாக அறிந்திருந்தும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவம் நடந்த நாளில் மஹாரிஃப் மஹாலி, 40, மற்றும் அரிஃப் அஸ்ரஃப் ஜமாலுதீன் 19, ஆகிய இருவர் காயங்களுடன் தப்பினர்.

இதனை அடுத்து, இவ்வழக்கு கொலை முயற்சிக்கான பிரிவு 307 இன் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது, இது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.

திருமணமாகாமல் பெற்றோருடன் வசிக்கும் அந்நபர் விசாரணையை எளிதாக்குவதற்காக போலீசில் சரணடைந்ததாக கூறினார்.

இந்நிலையில், ஒரு நபர்  உத்தரவாதத்துடன் RM10,000 ஜாமீன் தொகையை நீதிபதி நிர்ணயித்தார், மேலும் சாட்சிகள் எவரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *