நகைக் கடையில் நகைகளைத் திருடி மாற்றிய 3 இந்திய பெண்கள் கைது!

- Shan Siva
- 21 Feb, 2025
(இரா.கோபி)
கோலாலம்பூர், பிப் 21: சுங்கை பூலோவில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்துவந்த இந்தியப் பெண்கள் மூவர், நகைகளைத் திருடி போலி நகைகளை மாற்றியுள்ளதாக இம்மாதம் 5ஆம் தேதி போலீஸ் புகார் பெறப்பட்டது என்று புக்கிட் அமான் வாணிக குற்றப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லிமுகமட் யூசோப் தெரிவித்தார்.
போலீஸார் மேற்கொண்ட
நடவடிக்கையில் கடையில் உள்ள 26 சங்கிலிகளை சோதனை செய்ததில் அவை போலி
நகைகள் என்று கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் தொடர்பில்
அக்கடையில் பணிபுரியும் 3 இந்தியப் பெண்களை
கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,
அவர்களிடமிருந்து 26 அடகுக்கடை
ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது
செய்யப்பட்ட இந்தியப் பெண்கள் 28 முதல் 38 வயதினர் என்று ரம்லி கூறினார்.
அந்த ரசீதில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 550 வெள்ளிக்கு நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 916 கேரட், அதன் எடை 762.82 கிராம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நகைகளை
மாற்றிய சம்பவம் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் நடந்துள்ளதாக அவர் கூறினார்.
இச்சம்பவம்
தொடர்பில் இம்மாதம் 6ஆம் தேதி கைது
செய்யப்பட்ட மூவரில் இரண்டு பேர் இம்மாதம் 10ஆம் தேதி செக்ஷன் 408 பிரிவின்கீழ் ஷா ஆலம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு
வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று டத்தோஸ்ரீ
ரம்லி முகமட் யூசோப் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *