சப்ரியிடம் வெ.17 கோடி அந்நிய நாணயம், 16 கிலோ தங்கம்- எம்ஏசிசி அறிவிப்புஅறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 3-

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் லஞ்சஊழல் விசாரணையில் பதினேழு கோடி வெள்ளி மதிப்புள்ள அந்நிய நாணயமும் எழுபது லட்சம் வெள்ளி மதிப்புள்ள பதினாறு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு
ஆணையம் (எம்ஏசிசி) நேற்று தெரிவித்தது.

ஒரு வீட்டிலும் பாதுகாப்பான வீடுகள் எனக் கருதப்பட்டு வந்த இதர மூன்று வளாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவை கைப்பற்றப்பட்டன என்று எம்ஏசிசி தெரிவித்தது.தாய்லாந்தின் பாட், சவூதியின் ரியால், பவுண்ட் ஸ்டெர்லிங், கொரியாவின் வோன், யூரோ, சுவிஸ் ஃபிராங், சீனாவின்
யுவான் ஆகிய அந்நிய பணத்தாட்களை எம்ஏசிசி அதிகாரிகள் கைப்பற்றினர்.

இஸ்மாயில் சப்ரியின் கீழ் பணியாற்றிய நான்கு மூத்த அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக அந்தப் "பாதுகாப்பு வீடுகள்" கண்டுபிடிக்கப்பட்டன என்று அறிக்கையொன்றின்வழி அந்த ஆணையம் குறிப்பிட்டது.

இஸ்மாயில் சப்ரி பிரதமராகப் பதவி வகித்துவந்த காலகட்டத்தில் விளம்பரத்திற்காக பெறப்பட்ட நிதி மற்றும் செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.

Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) merampas mata wang asing bernilai RM17 juta dan emas 16kg bernilai RM7 juta dalam siasatan rasuah terhadap bekas Perdana Menteri Ismail Sabri. Rampasan dibuat di sebuah rumah dan tiga premis lain, susulan soal siasat terhadap empat pegawai kanan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *