மியான்மார் நெருக்கடிகளை களைவதில் மலேசியா ஒத்துழைக்கும்!

- Muthu Kumar
- 24 Feb, 2025
ரெம்பாவ், பிப்.24-
மியான்மாரில் நிலவும் நெருக்கடி, மனித கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அதன் மூலம் அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை மீட்டெடுக்க உதவுவதில் மலேசியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
கடந்த மாதம் லங்காவியில், நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் மியான்மார் பிரச்சினையும் ஒன்றாகும் என்று ஹசான் விளக்கினார்."அந்தந்த நாடுகளின் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று ஆசியான் சாசனம் கூறினாலும் மியான்மாரில் உள்ள உள்நாட்டுப் பிரச்சினை எல்லை கடந்து, அனைத்துலக குற்றமாகி, மனித கடத்தல், மோசடி செய்பவர்கள், குற்றவியல் கும்பல், போதைப்பொருள் போன்ற சம்பவங்கள் அண்டை நாடுகளுக்கு குறிப்பாக மலேசியாவுக்கும் பிரச்சினையாக உள்ளது." என்றார் அவர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதியில் உதவி பொருட்கள் வழங்கிய பின்னர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் அவ்வாறு கூறினார்.அதேவேளையில், நாட்டில் ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் மீதமுள்ள 22 மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் தாய்லாந்து அரசுடன் தமது தரப்பு இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *