சுற்றுலாவின் ஒரு பகுதியாக சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தி தமிழக பள்ளி மாணவர்கள்!

- Muthu Kumar
- 28 Feb, 2025
சைபர்ஜெயா, பிப். 28-
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாடுகளின் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்த புரிதலை மேம்படுத்தி கொள்ளும் முறை, தற்போது அனைத்து கல்விக் கூடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
குறுகிய கால பயணத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் இம்முயற்சி, மாணவர்கள் தங்களின் கல்வி அனுபவத்தைப் பெருக்கிக் கொள்ள பெரிதும் துணைப் புரிகின்றது.
அதில், மலேசியாவில் கல்விச் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 52 மாணவர்கள், இன்று சிலாங்கூர் சிப்பாங்கில் உள்ள சைபர்ஜெயா பல்கலைக்கழகத்திற்கு வருகைப் புரிந்தனர். பேச்சு போட்டி, அறிவியல் சார்ந்த கண்டுப்பிடிப்புகள், வினாடி வினா போட்டி என மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கும் மாணவர்களில் சிலரை தேர்வு செய்து, மலேசியாவுக்கு அழைத்து வந்திருப்பதாக, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
4 நாள்கள் பயணமாக அமைந்துவிடாமல், மாணவர்களுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய கல்வி சுற்றுலாவாக அமைவதை இம்முயற்சி நோக்கமாக கொண்டிருப்பதாக, அவர் தெரிவித்தார்.
12ஆவது படித்து விட்டு, ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தால் போதும், நம்முடைய தரத்திற்குப் படித்துவிட்டு ஒரு வேலையில் சேர்ந்தால் போதும் என்றில்லாமல், பெரிதாக சிந்திக்க வேண்டும்.
ஏனென்றால், மனிதனின் வாழ்க்கை என்பது இந்த ஒரு தலைமுறையில் நாம் என்ன கொடுக்கின்றோமோ, திருவள்ளுவர் கூறியது போல ஒரு தலைமுறைக்கு நாம் படித்துவிட்டோம் என்றால் நம்மை தொடர்ந்து ஏழு தலைமுறை இதுபோல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் அல்லவா, அதை விதைக்க வேண்டும் என்றால் இதுபோன்ற திட்டங்கள் மாணவர்களுக்குத் தேவை”, என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *