மாச்சாங் தொகுதித் தலைவர் தேர்தலில் வான் ஃபைசால் புறக்கணிக்கப்படவில்லை!

- Muthu Kumar
- 24 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 24-
கட்சி உறுப்பினர்களினால் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமால் புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால்தான், மாச்சாங் பெர்சத்து தொகுதித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அவர் தோல்வியுற்றதாக கூறப்படுவதை. கிளந்தான் மாநில பெர்சத்து நிராகரித்துள்ளது.
கோலாலம்பூரில் வசிக்கும் வான் ஃபைசாலுக்கு பதிலாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவரையே தொகுதி உறுப்பினர்கள் விரும்பியதாக, மாநில பெர்சத்து தலைவர் கமாருடின் நோர் தெரிவித்துள்ளார்.“இதில் வான் ஃபைசால் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அவர் மாச்சாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக சிறப்பாக சேவையாற்றியுள்ளார்.
"கிளந்தானில் பின்பற்றப்படும் கலாச்சாரத்தை ஒருவர் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் தொகுதிகளின் தலைவர்கள் அதே தொகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதையே பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என்று சுமாருடின் குறிப்பிட்டார்.மாச்சாங் தொகுதித் தலைவருக்கான தேர்தலில், நடப்புத் தலைவருக்கு எதிரான ஒரு போட்டியாளராக மட்டுமே வான் ஃபைசால் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
"மாச்சாங் தொகுதித் தலைவர் பதவியை வான் ஃபைசால் முன்பிருந்தே வகித்து வந்திருந்தால். அவரின் தோல்விக்கு மாறுபட்ட காரணம் இருந்திருக்கலாம். ஆதலால், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடந்த தொகுதிக்கான தலைவர் தேர்தலில் அதன் நடப்புத் தலைவர் கமாருடின் அப்துல் காடிர் தமது தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் என்று கமாருடின் கூறினார்.
அத்தேர்தலில், செருடின் என்றும் அழைக்கப்படும் கமாருடின் அப்துல் காடிர், 103 வாக்குகள் பெற்று வான் ஃபைசாலை தோற்கடித்துள்ளார். வான் ஃபைசாலுக்கு வெறும் 26 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *