சிலாங்கூர் முதல்வரிடம் மன்னிப்புக் கேட்டார் சனுசி! முடிக்கப்பட்டது வழக்கு!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், பிப் 26: சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடீன் ஷாரி, கெடா மாநில மந்திரி பெசார்  சனுசி மீது தொடுத்த அவதூறு வழக்கு, இன்று உயர் நீதிமன்றத்தில் சனுசி பொது மன்னிப்பு கேட்டதை அடுத்து, சுமுகமாகத் தீர்க்கப்பட்டது.

கிள்ளான் நதி சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பாக சனுசி தெரிவித்த அவதூறு அறிக்கைகள் மீதான சிவில் வழக்கைத் தீர்ப்பதற்கான தீர்வின் ஒரு பகுதியாக, கெடா மந்திரி பெசார் நீதிமன்றத்தில் அமிருதினிடம் மன்னிப்புக் கேட்டார்.

வழக்கு இத்துடன் தீர்க்கப்பட்டு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி ரோஸி பைனான் கூறினார்.

இருப்பினும், சனுசியின் மன்னிப்பு அறிக்கையை பொதுவில் வெளியிட நீதிபதி அனுமதிக்கவில்லை.

 தீர்வின் ஒரு பகுதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அல்லது அவற்றைப் போன்ற அறிக்கைகளை வெளியிடவோ அல்லது மீண்டும் வெளியிடவோ அல்லது எதிர்காலத்தில் வெளியிடவோ, அதற்கு உதவவோ கூடாது என்று ஒப்புக்கொண்டார்.

நீதிமன்ற அறைக்கு வெளியே, செய்தியாளர்களிடம் பேசிய அமிருதீன் சிவில் வழக்கின் முடிவு, சனுசியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.

அனைத்து தரப்பினரும்  அறிக்கைகளை வெளியிடும்போது கவனமாக இருக்க வேண்டும், பொதுமக்களைக் குழப்புவதைத் தவிர்க்க வேண்டும். இது அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு, அவதூறு அறிக்கைகளை வெளியிடுவது குறித்து தனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை என்று சனூசி கூறினார்.

தவறான அறிக்கையை யார் வெளியிட்டாலும் வழக்குத் தொடரலாம். நான் கடந்த காலங்களில் மற்றவர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளேன் என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி பெசார், RM10 பில்லியன் மதிப்புள்ள 600 ஏக்கர் (240 ஹெக்டேர்) அரசு நிலத்தை பெர்ஜெயா லேண்ட் பெர்ஹாமுக்கு இலவசமாக மாற்றுவதற்காக அதிபர் வின்சென்ட் தானுடன் கூட்டு ஒப்பந்தம் மூலம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சனுசி கூறியதை அடுத்து, அமிருடின் 2023 இல் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.

இதன் விளைவாக சிலாங்கூர் அரசுக்கு RM180 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் சனுசி கூறினார்.

சனுசியின் வாதத்தில், சிலாங்கூர் மந்திரி புசார் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு பதிலளிப்பதாகக் கூறினார்.

ஆகஸ்ட் 2023 இல் நடந்த ஆறு மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, அமிருடின் தன்னைப் பற்றி பல இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், தம்மை 'முரட்டுத்தனமானவர்' மற்றும் 'கோழை' என்றும் அழைத்ததாகவும் அவர் கூறினார்.

இதனை அடுத்து சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் என்று அழைக்கப்படும் RM700 மில்லியன் நதி அகலப்படுத்தும் திட்டம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக டான் மற்றும் பெர்ஜெயா லேண்ட் ஆகியோர் சனுசி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *