மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரு மாணவர்களுக்கு டத்தோ ஸ்ரீசுந்தரராஜூ நேரில் சென்று ஆறுதல்!

top-news
FREE WEBSITE AD

(தி.ஆர்.மேத்தியூஸ்)

ஜோர்ஜ்டவுன், பிப். 26-

தங்கள் பாட்டியுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயத்திற்குள்ளாகி பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களான இரு உடன்பிறப்புகளை பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு நேரில் சென்று கண்டார்.

பிள்ளைகளை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் வழங்கிய அவர்,பள்ளிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் குறித்து மிகுந்த வேதனையடைவதாகக் கூறினார். இவரின் வருகையின் போது உடன் வந்திருந்த மாநில கல்வி இலாகா இயக்குநர் துவான் வான் சஜிரி, பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் வழங்கினார்.

தலைமையாசிரியர் திருமதி சந்திரவதனி,பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் சரவணன் அண்ணாமலை வந்திருந்தனர். கடந்த 18.2.2025 காலை 7.15 மணியளவில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் பயிலும் தமது இரு பேரப்பிள்ளைகளை பாட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது,லோரி ஒன்றுடன் நிகழ்ந்த சாலை விபத்தில் மூவரும் காயமடைந்தனர்.

இதனிடையே பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும இவ்விரு மாணவர்களுக்கும் நிறைவான சிகிச்சையும், கவனிப்பும் வழங்கி வரும் பினாங்கு மருத்துவமனையின் மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும்,மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *