தெமெர்லோ வெள்ளத்தில் 73 வீடுகள் சேதம்!

- Sangeetha K Loganathan
- 22 Feb, 2025
பிப்ரவரி 22,
இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி பகாங் தெமெர்லோ பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக் அதிகரித்துள்ளது என பகாங் மாநில வெள்ள நிவாரண மையம் தெரிவித்துள்ளது. சுமார் 74 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் தற்காலில் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் Kampung Batu Kapor பகுதியில் உள்ள 73 வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் Sungai Semantan ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்ததைக் கவனித்த மீட்புப் படையினர் காலை 7 மணிமுதல் Sungai Semantan ஆற்றுச் சுற்றுப்பாதையில் தங்கியிருப்பவர்களைப் பாதுகாப்பாக மீட்டதால் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seramai 236 mangsa daripada 74 keluarga terjejas akibat banjir di Temerloh Pahang dengan 73 rumah mengalami kerosakan. Menurut Pusat Bantuan Banjir Negeri Pahang semua mangsa telah dipindahkan ke pusat pemindahan sementara. Paras air Sungai Semantan meningkat sejak tengah malam akibat hujan lebat namun tiada kehilangan nyawa berikutan operasi menyelamat yang bermula sejak jam 7 pagi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *