தேர்தலில் பாரிசான் சின்னத்தில் போட்டியிடுவோம்! - Ahmad Zahid Hamidi!

- Sangeetha K Loganathan
- 24 Jun, 2025
ஜூன் 24,
எதிர்வரும் 17 ஆவது சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் வேட்பாளர்கள் பாரிசானின் பாரம்பரியச் சின்னமான தராசு சின்னத்தில் போட்டியிடுவார்கள் என துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். பாரிசானுடன் பக்காத்தானும் சபாவின் GRS கட்சியுடன் கூட்டணிக் குறித்தான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொகுதிப் பங்கீடுகள் குறித்து அறிவக்கபடும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
என்ன மாதிரியானக் கூட்டணி அமைந்தாலும் பாரிசான் வேட்பாளர்கள் நிச்சயமாகப் பாரிசானின் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூட்டணி அமைப்பதற்கான எல்லா கதவையும் பாரிசான் திறந்து வைத்திருந்தாலும் தேர்தல் ஒப்பந்தங்களை நம்பிக்கையுடன் கையாளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி உறுதிச் செய்யப்படும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். சபா மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் போது மாநில அரசு கலைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Ahmad Zahid Hamidi menegaskan calon Barisan Nasional akan bertanding menggunakan simbol dacing pada Pilihan Raya Negeri Sabah akan datang. Beliau turut memaklumkan rundingan kerjasama dengan PH dan GRS sedang dijalankan sebelum pengumuman pembahagian kerusi dibuat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *