24 பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து! மூவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 20 Feb, 2025
பிப்ரவரி 20,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தங்சோங் மாலிம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை பராமரிப்பு லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உட்பட மூவர் படுகாயம் அடைந்ததாகவும் 21 பயணிகள் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
நேற்று மாலை 4.27 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்த நிலையில் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாகவும் பாடுகாயம் அடைந்த பேருந்து ஓட்டுநர், அவரின் உதவியாளர், சாலை பராமரிப்பு தொழிலாளர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் பேருந்து விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad உறுதிப்படுத்தினார்.
Sebuah bas yang membawa 24 penumpang terlibat dalam kemalangan selepas hilang kawalan dan melanggar lori penyelenggaraan jalan di Lebuhraya Utara-Selatan berhampiran Tanjung Malim. Tiga individu termasuk pemandu bas cedera parah manakala 21 penumpang mengalami kecederaan ringan. Tiada kemalangan jiwa dilaporkan dan pihak berkuasa masih menyiasat punca kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *