உரிமம் இல்லாமல் இயங்கிய உலோகப் பட்டறையின் மிது நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 27 Feb, 2025
பிப்ரவரி 27,
முறையான அனுமதியின்றி இயங்கி வந்த 2 உலோகப் பட்டறைகளை ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPHS) மூடும்படி உத்தரவிட்டுள்ளது. சம்மந்தப்பட்ட 2 பட்டறைகளும் முறையான உரிமங்கள் இல்லாது இயங்கிய நிலையில் ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPHS) அதிகாரிகள் நேற்று சோதனையை மேற்கொண்ட நிலையில் காலாவதியான ஆவணங்களை உலோகப் பட்டறை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.
கோலா சிலாங்கூர், செராண்டா பகுதிகளில் இயங்கி வந்த சம்மந்தப்பட்ட உலோகப் பட்டறைகளின் உரிமம் காலாவதியான நிலையில் புதுப்பிக்காமல் தொடர்ந்து உலோகங்களை மறுசுழற்சி செய்தும் ஏற்றுமதி செய்தும் வந்ததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPHS) தெரிவித்துள்ளது.
Dua bengkel logam di Hulu Selangor diarahkan tutup oleh MPHS kerana beroperasi tanpa lesen sah. Siasatan mendapati premis tersebut menggunakan dokumen tamat tempoh dan masih menjalankan aktiviti kitar semula serta eksport logam tanpa memperbaharui permit mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *