படகு எஞ்சினில் சிக்கிய ஆடவர் மரணம்! மற்றொருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 05 Mar, 2025
மார்ச் 5,
மீன்படி படகின் எஞ்சினில் சிக்கிய 58 வயது மீனவர் உயிரிழந்ததுடன் 27 வயது மற்றோர் ஆடவரும் படுகாயம் அடைந்தார். காலை 11.22 மணிக்குச் சரவாக் மீட்பு ஆணையத்திற்கு அவசர அழைப்புக் கிடைத்தத நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு அதிகாரிகள் விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிப்பதற்காக மீரியில் உள்ள Sungai Baram ஆற்றில் படகைச் செலுத்தும் போது படகு சுழலில் சிக்கியதாகவும் படகின் எஞ்சின் பகுதியில் 58 வயது மீனவர் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞருக்குத் தலையிலும் கைகளிலும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே 58 வயது ஆடவர் உயிரிழந்த நிலையில் 27 வயது இளைஞரை மீரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் விபத்துக்குறித்தான மேலதிக விசாரணையைக் காவல் துறையினர் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki maut selepas terkena kipas enjin bot dalam insiden di Sungai Baram, Miri. Rakannya yang memandu bot mengalami kecederaan di kepala dan tangan. Mangsa diselamatkan penduduk rumah panjang sebelum pihak berkuasa tiba untuk bantuan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *