ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு 93 மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை!

- Muthu Kumar
- 02 Mar, 2025
சிரம்பான் ஜெயா, மார்ச் 2-
ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 93 மூத்த குடிமக்களுக்கு தலா வெ 200 உதவித் தொகை வழங்கப்பட்டது.
70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் வழங்கினார்.
இந்த மூத்த குடிமக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுவதாக குணா கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் பங்களிப்பை மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மறந்து விடவில்லை என அவர் கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த சீனப் புத்தாண்டின் போது 838 மூத்த குடிமக்களுக்கு சிரம்பான் ஜெயா சட்டமன்ற அலுவலகம் உதவித்தொகை வழங்கியதாக அவர் சுட்டிக் காட்டினார்.இது மட்டுமின்றி புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு தலா வெ 500 உதவித் தொகையை மாநில அரசாங்கம் வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் வசதி குறைந்தவர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.மாநில அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளை பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள் மூலம் இம்மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இதை விடுத்து மாநில அரசாங்கத்தை குறை கூறி வருவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
குறிப்பாக சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் குறித்து தமது சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து புகார் செய்யலாம் என அவர் கேட்டுக்கொண்டார்.மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
Sempena Hari Raya, 93 warga emas di Seremban Jaya menerima bantuan RM200 daripada ADUN Pakatan Harapan, P. Gunasekaran. Beliau menegaskan kerajaan negeri prihatin terhadap kebajikan rakyat. Bantuan juga diberikan kepada pasangan baru berkahwin dan masyarakat digalakkan mendapatkan maklumat rasmi mengenai bantuan kerajaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *