போதைப்பொருள் பயன்படுத்தும் கும்பலைச் சேர்ந்த 80 பேர் கைது!

top-news

பிப்ரவரி 24,

லங்காவியில் உள்ள தனியார் இடத்தில் போதைப்பொருள் பயன்பாடுகள் நடப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் 80 பேரைக் கைது செய்தனர். 20 முதல் 60 வயதுள்ளவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். 

லங்காவியில் உள்ள பலருக்கும் சம்மந்தப்பட்ட பகுதியிலிருந்து போதைப்பொருள் கைமாறுவதாகவும் உள்ளூர்வாசிகள் பலரும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 80 பேரும் 3 வெவ்வேறு கும்பல் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அவர்களிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணையை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pihak berkuasa menahan 80 individu berusia 20 hingga 60 tahun dalam serbuan di Langkawi selepas menerima maklumat mengenai aktiviti penyalahgunaan dadah. Siasatan awal mendapati mereka terdiri daripada tiga kumpulan berbeza yang terlibat dalam pengedaran dan penggunaan bahan terlarang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *