பெர்லிஸில் 545.35 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 20 Feb, 2025
பிப்ரவரி 20,
அண்டை நாடுகளிலிருந்து கடல் வழியாகப் போதைப்பொருளைக் கடத்துவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் Kuala Perlis கடல்கரையில் மேற்கொண்ட சோதனையின் கைவிடப்பட்ட நிலையில் 545.35 கிலோ போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தேசிய சுங்கத்துறை உதவி இயக்குநர் Raizam Setapa Mustapa தெரிவித்தார்.
அதிகாலை 2 மணிக்குச் சிறப்பு அதிகாரிகளுடன் ரோந்து பணியில் இருந்த போது தகவல் கிடைத்ததாகவும் 25 சாக்கு மூட்டைகளில் கஞ்சா வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மொத்த மதிப்பு RM1.69 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமீபக் காலமாகக் கடல் வழியாகக் கடத்தல் பொருள்கள் மலேசியாவுக்குள் கொண்டுவரப்படுவதால் கோப்ரா எனும் சிறப்புப் படை அமைக்கப்பட்டு கடல் எல்லை பகுதிகளைக் கண்காணித்து வருவதாகத் தேசிய சுங்கத்துறை உதவி இயக்குநர் Raizam Setapa Mustapa தெரிவித்தார்.
Sebanyak 545.35 kg dadah jenis ganja bernilai RM1.69 juta ditemui ditinggalkan di pesisir pantai Kuala Perlis dalam operasi Jabatan Kastam. Dadah itu dipercayai cuba diseludup melalui laluan laut dari negara jiran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *