தடுப்புக் காவல் மரணம்! காரணமானவர்களைத் தண்டிக்க விஜயன் குடும்பத்தினர் சுஹாகாமிடம் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, பிப் 28: சிறையில் இருக்கும்போது மரணமடைந்த தனது சகோதரன் விஜயனின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகாம், தைப்பிங் மருத்துவமனை மற்றும் தைப்பிங் சிறைச்சாலையை விசாரிக்க வேண்டும் என்று, விஜயனின் சகோதரி கோரிக்கை வைத்துள்ளார்.

அதிகாரிகள் தனது சகோதரனுக்கு ஏற்பட்ட காயங்களை மறைத்ததாகக் கூறும் சிசிலியா ஜோசப் எனும் அந்த சகோதரி, இரண்டு விலா எலும்பு முறிவுகளும் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

விஜயன் வார்டன்களால் தாக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக இரண்டு விலா எலும்புகள் உடைந்ததாகவும், ஆனால் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

னது சகோதரனின் மரணத்திற்கு தாங்கள் நீதி கோருவதாகவும்,  மேலும் இந்த வழக்கை விசாரித்து பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுஹாகாமை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

னது சகோதரனை அடித்ததாக சந்தேகிக்கப்படுபவர்கள் மீது கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும்ச் என்று அவர் இன்று சுஹாகாம் அலுவலகத்தில் ஒரு குறிப்பாணையை சமர்ப்பிப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த ஜனவரி 24 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிப்ரவரி 15 அன்று விஜயன் இறந்ததாக சிசிலியா கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *